கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமீரகம் மற்றும் மாலத்தீவுகளில் சிக்கி தவிக்கும் இந்திய குடிமக்களை இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்காக மூன்று கடற்படைக் கப்பல்களை அனுப்பியுள்ளதாக பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை அதிகாலை தெரிவித்தார்.
மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல INS ஜலாஷ்வா மற்றும் INS மாகர் என்கிற இரண்டு கப்பல்களும் திங்கள்கிழமை இரவு மும்பையிலிருந்து புறப்பட்டுவிட்டதாகவும், அமீரகத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து செல்ல INS ஷார்துல் கப்பல் புறப்பட்டுவிட்டதாகவும் மேலும் அவர் கூறினார்.
Three Navy warships have sailed out to bring back Indian citizens from Maldives and United Arab Emirates (UAE). The warships include INS Jallashwa, INS Magar and INS Shardul: Indian Navy officials (1/2) pic.twitter.com/VNE1dAdf9g
— ANI (@ANI) May 5, 2020
அவ்வாறு இந்தியர்களை ஏற்றி செல்லும் மூன்று கப்பல்களும் கேரளா மாநிலத்தின் கொச்சினிற்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.