Tamil Reader

இந்தியாவில் பரவக் காத்திருக்கும் கொரோனா மூன்றாம் அலை – பாதிப்பு அதிகமாக இருக்கும் என எச்சரிக்கும் நிபுணர்கள்..!

corona Patient

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா மோசமாக பாதிக்கப்பட்டுவருகிறது. கொரோனா நோயாளிகளை அனுமதிக்க மருத்துவமனைகளில் இடமில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை, போதிய படுக்கை வசதி இல்லாமை ஆகியவற்றால் இந்தியா மிகப்பெரிய சிக்கலை சந்தித்துவருகிறது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 லட்சத்தைத் தொட்டிருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர், நவம்பர்  மாதங்களில் கொரோனா மூன்றாம் அலை பரவும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனையடுத்து கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள அரசு தயார்நிலையில் இருக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுநோய் நெருக்கடியைச் சமாளிக்க, சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்க வேண்டும், பயிற்சி முடித்த மருத்துவர்களை கொரோனா தடுப்பு பணியில் நியமிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை நீதிமன்றம் வலியுறுத்தியது.

மூன்றாம் அலையின்போது குழந்தைகளுக்கும் எளிதில் நோய்ப்பரவல் நிகழும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் நிலைமையை கையாள்வது தொடர்பான உத்திகளை வகுக்க வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க.!