Tamil Reader

இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சமாக இன்று ஒரேநாளில் 4.01 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி – அதிர்ச்சியில் மத்தியரசு..!

corona Patient

இந்தியாவில் நாள்தோறும் கொரோனா பரவல் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. கடந்த 9 நாட்களாக தினசரி 3 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று இதுவரையில் இல்லாத உச்சமாக 4.01 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 401993 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.  இதனால் மொத்த கொரோனா பாதிப்பு 1,91,64,969 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 3,523 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,11,853 ஆக உயர்ந்து உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 2,99, 988 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1,56,84,406 ஆக உயர்வடைந்து உள்ளது.  மொத்தம் 32,68,710 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மத்திய அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இதையும் படிங்க.!