Tamil Reader

இந்த ஒரு ரூபாய் தாள் வைத்திருந்தால் உங்களுக்கு 45,000 ரூபாய் தருகிறோம் – பிரபல இணையதளம் வெளியிட்ட அறிவிப்பு..!

1rupeenote

ஒரு ரூபாய் தாளை நம்மில் பலரும் பார்த்திருப்போம். 2k கிட்ஸ்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். அந்த ஒரு ரூபாய் தாளுக்கு காயின்பஜார்.காம் என்னும் இணையதளம் 44,999 ரூபாய் தருவதாகத் தெரிவித்துள்ளது. உண்மைதான். ஆனால் இரண்டு கண்டிஷன். முதலாவது அந்த ரூபாய் 1957 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இரண்டாவது அப்போதைய நிதியமைச்சர் ஹிருபாய் எம்.பட்டேலின் கையெழுத்து அதில் இருத்தல் வேண்டும். மேற்கண்ட ஒரு ரூபாய் தாள் உங்களிடம் இருந்தால் இப்போதே இணையதளத்திற்குச் சென்று அதனை தெரியப்படுத்துங்கள்.

பழைய நாணயங்கள், ரூபாய் தாள்களை சேகரிக்கும் நபர்களை நாம் பார்த்திருப்போம். அவற்றுள் சில மிக அரிய பொக்கிஷங்களாகவும் இருக்கக்கூடும். ஆகவே அவற்றை சேகரிக்கும் நபர்கள் பல்வேறு வகையில் இதற்கு முயற்சி எடுத்துவருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் பழைய 50 ரூபாய் நோட்டை 8,200 ரூபாய்க்கும், 10 – 5 ரூபாய் நோட்டை 2999 ரூபாய்க்கும், 2 ரூபாய் நோட்டை 4999 ரூபாய்க்கும் வாங்கிக்கொள்வதாக இணையதளம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த மேலதிக விபரங்களுக்கு இணையதளத்தை நாடவும்.

இதையும் படிங்க.!