Tamil Reader

“நீங்கதான் கடவுள்” – கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களின் காலில் விழுந்து வணங்கிய மருத்துவமனை டீன்..!

DEAN

இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. கொரோனா மாதிரியான பெருந்தொற்றுக் காலத்தில் மக்களைக் காக்க தங்களது உயிரைப் பணயம் வைக்கும் மகத்தான இம்மனிதர்களுக்கு நாம் இந்நேரத்தில் நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

செய்வதற்கரிய சேவைகளை வழங்கிவரும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மருத்துவமனை டீன் ஒருவர் அவர்களது காலில் விழுந்து வணங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கோவையில் உள்ள ESI மருத்துவமனையில் தான் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இன்று வழக்கம்போல் பணிக்குத் திரும்பிய அம்மருத்துவமனையின் டீன் ரவீந்திரன் கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தரையில் விழுந்து வணங்கியிருக்கிறார். இதனைக்கண்ட செவிலியர்களும் கண்ணீருடன் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க.!