Tamil Reader

செயின் அடித்தது மட்டுமின்றி வாயில் போட்டு விழுங்கிய பலே திருடன் – நடந்தது என்ன?

பரபரப்பான பெங்களூரு சிட்டியில் எம்.டி. சாலை பகுதியில் ஹேமா என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை 3 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றது. வழிபறி கும்பலை கண்டு கூக்குரலிட்ட ஹேமா அவர்களை துரத்திச் சென்றுள்ளார். அக்கம்பக்கத்தினர் முயற்சியால் 3 பேரில் 21 வயதான விஜய் குண்டா மற்றும் சிக்கினார். இதர நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். பொதுமக்களிடம் பிடிபடப்போவதை அறிந்த விஜய்,தான் அடித்த செயினை உடனடியாக வாயில் போட்டு விழுங்கியுள்ளார். செயினை தான் திருடவில்லை எனக்கூறி நடித்ததால் பொதுமக்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சஞ்சய், பிரேம் ஆகியோருடன் இணைந்து செயின் பறித்ததாகவும் செயின் தன்னிடம் இல்லை எனவும் மன்றாடியுள்ளார். போலீசாரும் அதனை நம்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேவில் விஜயின் வயிற்றில் செயின் சிக்கியிருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார் விஜய்க்கு வாழைப்பழங்களை கொடுத்து செயினை வெளியில் எடுக்க முயன்றனர். அது பலனளிக்காததால் மருத்துவர்கள் வயிற்றுப்போக்கிற்கான மருந்தை வழங்கி செயினை பத்திரமாக மீட்டனர். செயின் பறித்தது மட்டுமின்றி அதனை விழுங்கி அப்பாவி போல நடித்த விஜயை கண்டு போலீசாரே வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து அவரை சிறையில் அடைத்த அதிகாரிகள், பலே திருடனின் சக கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க.!