Tamil Reader

இந்தியாவில் இருந்து பயணிகள் வரத்தடை – இலங்கை அரசு அறிவிப்பு..!

chennai-AIRPORT

இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு இந்தியாவில் இருந்து பயணிகள் விமானம் இலங்கை வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 14 நாடுகள் இந்தியாவில் இருந்து பயணிகள் தங்களது நாட்டிற்கு வரத் தடை விதித்திருந்தன. அவை,

  1. பாகிஸ்தான்
  2. அமெரிக்கா
  3. ஐக்கிய ராஜ்ஜியம்
  4. நியூசிலாந்து
  5. ஹாங்காங்
  6. சிங்கப்பூர்
  7. ஓமான்
  8. பிரான்ஸ்
  9. அமீரகம்
  10. சவூதி அரேபியா
  11. கனடா
  12. குவைத்
  13. நெதர்லாந்து
  14. தாய்லாந்து

இந்தப் பட்டியலில் இலங்கையும் தற்போது இணைந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், இந்திய பயணிகள் இலங்கைக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், மருத்துவத்துறை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களின் அடிப்படையில், கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும் என்றும் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறி உள்ளது.

இதையும் படிங்க.!