Tamil Reader

24 விமானங்களுடன் ஏர் ஏசியா மீண்டும் சேவையை தொடங்க வாய்ப்பு..!

Air Asia

இந்திய ஊரடங்கின் காரணமாக அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன, இந்த ஊரடங்கு ஆரம்பத்தில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை விதிக்கப்பட்டது, பின்னர் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சில இந்திய விமான நிறுவனங்கள் மே 4 முதல் ஒரு கட்டமாக விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளன, மேலும் முன்பதிவுகளை செய்யத் தொடங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்றும், இந்த விவகாரத்தில் உத்தரவு வரும் வரை காத்திருக்கவும் இந்திய அரசாங்கம் அவர்களுக்கு அறிவுறுத்தியது.

ஊரடங்கு காலம் முடிந்த பிறகு மலிவுக் கட்டண விமான சேவையான ஏர் ஏசியா மீண்டும் 24 விமானங்களை இயக்க வாய்ப்புள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தேவையான ஒப்புதல்களைப் பெற்றவுடன், விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்க எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் வகுத்துள்ள சமூக இடைவெளி வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தவும் கண்டிப்பாக அதனை பின்பற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!