Tamil Reader

துபாயில் இருந்து வந்த 7 பேர் – கேரளாவில் அறிகுறியே இல்லாமல் COVID-19 பாதிப்பு; சுகாதாரத்துறை அதிர்ச்சி!

Kerala-COVID-19

இந்திய மாநிலம் கேரளாவில் COVID-19 நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாத 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அம்மாநில காசர்கோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 121 பேர் இந்த COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இவர்களில் 85-க்கும் மேற்பட்டோர் துபாய், குவைத் உட்பட வெளிநாடுகளில் இருந்து வந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காசர்கோடு மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் துபாயில் இருந்து வந்த 7 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பாதிப்பிற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது.

இவர்கள் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவு நேற்று முன்தினம் வந்தது.

அதில் 7 பேருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறியே இல்லாதவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்திருக்கலாம். இதனால்தான் கொரோனா அறிகுறி தெரியவில்லை என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, கேரள முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கேரளாவில் 21 பேருக்கு கொராேனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இதுவரை 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், என்றார்.

மற்ற சில பதிவுகள்

error: Alert: Content is protected !!