Tamil Reader

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..!

CSK

உலக அளவில் ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபில் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றுவருகின்றன. ஒருபுறம் கொரோனா தனது கோரமுகத்தைக் காட்டிவருகிறது. இதனால் ரசிகர்கள் இல்லாமல் பலத்த கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறுகின்றன.

வீரர்கள் அனைவரும் பையோ பப்புள் எனப்படும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்குமாறு முன்னதாகவே உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியியைச் சேர்ந்த தமிழக வீரரான வருண் சக்கரவத்தி மற்றும் கேரளாவைச் சேர்ந்த சந்தீப் வாரியருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்திருக்கிறது. ஆனால், அந்த அணியைச் சேர்ந்த மற்ற வீரர்கள் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். இதனால் இன்று நடைபெற இருந்த பெங்களூர் – கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியைச் சேர்ந்தவர்களுக்கும்…

இதனிடையே சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே சென்னை வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அனைவருக்கும் நெகட்டிவ் என வந்திருக்கிறது.

கொல்கத்தவைத் தொடர்ந்து சென்னை அணியைச் சேர்ந்தவர்களுக்கும் கொரோனா வந்திருப்பது மற்ற அணிகளிடையே கலக்கத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த தொற்றுக் காலத்தில் IPL போட்டிகள் தேவைதானா? என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்படுகிறது.

இன்றைய சூழ்நிலையில் IPL தேவைதானா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் கமெண்டில் தெரிவியுங்கள்.

இதையும் படிங்க.!