Tamil Reader

பீரோவில் இருந்த கட்டுக்கட்டான பணத்தால் மாரடைப்பு ஏற்பட்டு விழுந்த திருடன் – உத்திரப் பிரதேசத்தில் சுவாரஸ்யம்..!

thief

இந்த வினோதமான சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்னதாக அரங்கேறியது. திருடன் ஒருவனுக்கு திருட சென்ற இடத்தில் அவன் எதிர்பார்த்ததை விட பணம் அதிகமாக இருந்ததைக் கண்டு ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது.

அவரால் அதிக பணம் கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட  முடியாமல் போனதுடன் தீவிரமான மாரடைப்பாலும் பாதிக்கப்பட்டார் மேலும் திருடிய பணத்தின் பெரும்பகுதி அவரது சிகிச்சையில் சென்றது தான் அல்டிமேட்.

வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

கோட்வாலி தேஹாத் பகுதியில் கடந்த மாதம் நடந்த திருட்டு சம்பந்தமாக இரு திருடர்களில் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார், அவரை போலீசார் விசாரித்த போது அவர் அளித்த வாக்குமூலத்தில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

பிஜ்னோர் காவல்துறை கண்காணிப்பாளர் தரம் வீர் சிங் இதுபற்றிக் கூறுகையில், பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரவில் திருடர்கள் நவாப் ஹைதருக்குச் சொந்தமான பொது சேவை மையத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அது சம்பந்தமாக ஹைதர் அளித்த புகாரைத் தொடர்ந்து, மையத்திலிருந்து ரூ .7 லட்சத்துக்கு மேல் திருடப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

புதன்கிழமை, நவுசாத் மற்றும் எஜாஸ் என்ற இருவரையும் (இருவரும் 30 வயதுக்கும் குறைவானவர்கள்) நஜினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலிபூரில் கைது செய்ததன் மூலம் இந்த வழக்கை முடித்ததாக போலீசார் கூறினர்.

இதையும் படிங்க.!