இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

மேற்கிந்திய தீவுக்கும் இந்தியாவிற்கும் இடையியேயான 4-வது ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இந்திய அணியின் ஆட்டம்:

டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 50 ஓவர்களில் 377 ரன்களை குவித்தது. இதில் ரோஹித் சர்மா 162 , அம்படி ராயுடு 100 ரன்களும் எடுத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேற்கிந்திய தீவு அணியின் ஆட்டம்:

378 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலம் இறங்கிய மேற்கிந்திய தீவு அணியினர் இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெறும் 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தனர்.

நல்ல பந்துவீச்சு:

இந்திய அணியில் கலீல் அஹ்மத் 3 விக்கெட்களையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும் எடுத்து தங்களுடைய சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இந்த வெற்றியின் மூலன் தொடரில் இந்திய அணி 2-1 என்ற முன்னிலை அடைந்தது.