ஷார்ஜாவில் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் திரஹத்தை போலீஸில் ஒப்படைத்த இந்தியர்…

துபாய் ஷார்ஜா காவல் துறையினரால் இந்தியர் கவுரவிக்கப்பட்டார்.

ஆல் இல்லாத இடத்தில் கண்டெடுக்கப்பட்ட 1 லட்சம் திரஹத்தை ஷார்ஜா காவல் துறையிடம் ஒப்படைத்த இந்தியரை அந்த நாட்டு அரசு பெருமைப்படுத்தி உள்ளது.

இந்திய மதிப்பில் 19 லட்சம் மதிப்புள்ள பணத்தை தானே முன்வந்து போலீஸாரிடம் அளித்தது பாராட்டுக்குரியது.

சார்ஜா போலீஸ் அதிகாரி குறிப்பிடுகையில் இவரின் செயல் பாராட்டுக்குரியது என்றும் மேலும் இவரின் நேர்மையையும் ஆளுமையையும் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களின் பாராட்டையும் வாழ்த்துக்களையும் பெற்ற அவர் மற்றவர்களுக்கு முன்உதாரணமாக இருந்து வருகிறார்.