திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டு – 5 பவுன் செயின் பறிப்பு…

திருவாரூர் மாவட்டத்தில் தொடரும் திருட்டு சம்பவம். ஆசிரியையின் 5 பவுன் செயின் பறிப்பு.

திருவாரூர் மாவட்டம் ஆவூர் சாளுவம்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி கவிதா(வயது 38). இவர் நீடாமங்கலத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தாயார் பார்வதியுடன் கவிதா ஸ்கூட்டரில் கும்பகோணத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

அப்போது தேனாம்படுகை மெயின் சாலையில் வந்தபோது ஸ்கூட்டரை பின் தொடர்ந்து மொபட்டில் வந்த மர்ம நபர், கவிதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டான்.

இதுகுறித்து கவிதா பட்டீஸ்வரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடிவருகின்றனர்.

2 நாட்களுக்கு முன்பு பொதக்குடியில் 150 சவரன் தங்க நகைகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.