சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் TNTJ சார்பாக நிலவேம்பு கசாயம்!

சமீப காலமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலினால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு சிலர் உயிரிழந்து உள்ளனர்.

எனவே, டெங்கு காய்ச்சலினால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக TNTJ தி.நகர் கிளை சார்பாக நிலவேம்பு கசாயம் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.