இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி.

இந்த போட்டியானது, மகாராஷ்டிரா கிரிக்கெட் அஸோஸியேஷன் மைதானம், புனேவில் நடைபெற்றது. இதில் “டாஸ்” வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸீன் ஆட்டம்:

வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்களில் 283 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் “ஷாய் ஹோப்(Shai Hope) 95” ரன்கள் எடுத்து தன்னுடைய அணிக்கு வலு சேர்த்தார்.

இந்திய அணியின் ஆட்டம்:

50 ஓவர்களில் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 240 ரன்கள் மட்டும் அடித்து அணைத்து விக்கெட்டையும் இழந்தது. அதில், விராட் கோலி மட்டும் 107 ரன்களை குவித்தார். மற்ற முன்னணி மட்டையாளர்களிய ரோஹித் சர்மா, ஷிகர் தவான், டோனி போன்றவர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டம் இழந்தார்கள்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தங்களுடைய வெற்றியை தட்டி சென்றது!