டெல்லியில் கொலை செய்யப்பட்ட 8 வயது சிறுவன், SDPI கட்சி நீதிக்கான சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கை.

டெல்லியில் 8 வயது இஸ்லாமிய சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விசயம் குறித்து கேள்விப்பட்ட SDPI கட்சியின் முன்னாள் டெல்லி மாநில தலைவரும், வழக்கறிஞருமான “அஸ்லம் அஹ்மது” அவர்களது தலைமையில் ஒரு குழு நேற்று (26-10-2018) பேகம்பூர், மாள்வியா நகருக்கு சென்று, சிறுவன் அஸீம் படுகொலையில் நீதிக்கான சட்டப்போராட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை வெகு விரைவாக கைது செய்து, மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் காவல்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர். மேலும், இந்த நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோஜ் குமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சிறுவன் அஸீம் படுகொலைக்கு நீதிகோரி பெங்களூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக போராட்டமும் நடைபெற்றது.