டெல்லியில் 8 வயது இஸ்லாமிய சிறுவன் அடித்து கொலை!

டெல்லி மலாவியா நகர் பகுதியில் உள்ள மதரஸா விடுதியின் வியாழன்(25.10.2018) காலை 10 மணி அளவில் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் “முஹம்மது அஜ்மின்” மற்றும் அவரது நண்பர்கள் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த “முஹம்மது அஜீம்” மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற மாணவர்கள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

முஹம்மது அஜீம்

மதரசா கவனிப்பவர் கூறியது:

மவுலானா அலி ஜவஹர் (மதரசா கவனிப்பவர்) கூறுகையில் “முஹம்மது அஜீம்” ஜனவரி மாதம் 2017 முதல் இந்த மதாஸாவில் தாங்கிவருகிறார். அந்த மாணவன் இதுவரை யாரிடமும் சண்டையிட மாட்டார், மிகவும் அமைதியான மற்றம் பணிவானவன். “முஹம்மது அஜீம்” வழக்கம் போல் மதராசாவிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்தபோது, தீடிரென்று உள்ளூர் சிறுவர்கள் சிலர் கடுமையாக தாக்கி, அங்கே நிறுத்தி வைக்கப்படிந்திருந்த இரு சக்கர வாகனத்தில் முஹம்மது அஜீமை தூக்கி வீசினர்.

என்ன நடவடிக்கை?

இது தொடர்பாக போலீஸ் கூறியதாவது; 2 குழுக்களிலும் சுமார் 5 முதல் ஆறு சிறுவர்கள் இருந்திருக்கிறார்கள். எனவே, இந்த சம்பவம் தொடர்பாக நாங்கள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்த்து வருகிறோம்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த “முஹம்மது அஜீம்” சிறுவனின் உடல் பிரயோத பரிசோதைக்கு “AIIMS” மருத்துமனையில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது போல, சில மாதங்களுக்கு முன்னர் சில விஷமிகள் தங்களின் மதர்ஸாக்குள் “சாராய பாட்டில்களை” வீசினார்கள். இது குறித்து, நாங்கள் அப்பொழுதே போலீசிடம் புகாரும் அளித்தோம். மேலும், இது போல் 15 வழக்குகள் கடந்த சில மாதங்களில் மட்டும் நடந்திருக்கிறது என்று அந்த மதரஸாவில் வசிக்கும் “முகீம்” கூறினார்.