குவைத் நாட்டில் இருசக்கர தீயணைப்பு வாகனங்கள்…

குவைத் நாட்டின் தீயணைப்பு துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகன அமைப்பை கொண்ட தீயணைப்பு வாகனங்கள்.

அந்நாட்டில் பேரிடர் மீட்புக்குக் தேவையான கனரக தீயணைப்பு வாகனங்கள் இருந்த போதிலும் சிறிய மற்றும் குறுகலான பாதைகளில் செல்லக்கூடிய மேலும் பெரிய அளவிலான தீயணைப்பு வாகனங்கள் செல்லமுடியாத இடங்களை கருத்தில் கொண்டு இந்த மோட்டார் தீயணைப்பு வண்டிகளை குவைத் தீயணைப்பு துறையினர் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளனர். அவசர நேரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் இதன் பயன்பாடு அதிகம் தேவை என குறிப்பிட்டுள்ளனர்.