தமிழகத்தில் இரண்டு அடுக்கு பேருந்து நிலையம்…

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தால், மாதவரம் ரவுண்டானா அருகில் 8 ஏக்கர் பரப்பளவில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், தரை தளத்தில் 51 பேருந்துகளையும், மேல்தளத்தில் 50 பேருந்துகளையும் நிறுத்தி வைக்க முடியும்.

9 மாநகரப் பேருந்துகளுக்கு இந்த பேருந்து நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ஆந்திர மாநிலம், நெல்லூர், திருப்பதி, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்பட உள்ளன.

பயணிகள் தங்கும் இடம், தாய்மார்கள் பால் ஊட்டும் அறை, நடத்துனர் ஓட்டுநர் தங்கும் வசதி உள்ளிட்டவை இந்த இரண்டு அடுக்கு பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த புதிய பேருந்து நிலையத்தால், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் வாய்ப்பு உள்ளது.

தமிழகத்திலேயே முதல்முறையாக கட்டப்பட்டுள்ள இந்த இரண்டு பேருந்து நிலையத்தை, வரும் 10-ஆம் தேதி திறப்பதற்காக ஏற்பாடுகள் முழூ வீச்சில் நடைபெற்று வருகின்றன.