‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினருக்கு ஸ்டாலின் வாழ்த்து!

‘பரியேறும் பெருமாள்’ படக்குழுவினருக்கு ஸ்டாலின் வாழ்த்து.

இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு ரஞ்சித் அவர்களின் தயாரிப்பில், “மறக்கவே நினைக்கிறேன்” எழுதிய அறிமுக இயக்குநர் திரு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் பார்த்தேன்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் பார்த்த உணர்ச்சிப்பூர்வமான திரைப்படம். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். ‬தலைவர் கலைஞர் அவர்கள் இருந்திருந்தால், நிச்சயம் படத்தை வெகுவாக பாராட்டியிருப்பார்.

சமூக நீதியும், சமத்துவமும் மிக்க மானுடம் போற்றப்படவும், சமூக அழுக்கை துடைத்து மனித வன்மத்தை விரட்ட இன்னும் பல பரியேறும் பெருமாள்கள் வர வேண்டுமென வாழ்த்துகிறேன்!

இவ்வாறு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.