தமிழகத்தில் அக்.7ஆம் தேதி ரெட் அலெர்ட்!

தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வரும் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கனமழையின் அளவு உச்சகட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது. அன்று மட்டும் 25 செ.மீ. அளவு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ரெட் அலெர்ட் எனப்படும் எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.