UAE-க்கு வித்தியாசமான முறையில் நன்றி செலுத்திய இந்தியர்…

சபீல் இஸ்மாயில் (40) என்ற இந்தியர் UAE க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக “Thank you UAE” என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து துபாய்-லிருந்து ராஸ்-அல்-கைமா வரை நடந்து சென்று கேரள வெள்ள நிவாரண உதவிக்கு தனது நன்றியை துபாய் அரசுக்கு வித்தியாசமான முறையில் தெரிவித்தார்.

இஸ்மாயில் ஒரு நடைபயிற்சி ஆர்வலர், ஏழு அமீரகத்தை நடந்து சென்று நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். எனினும், அவரது பயணத்தின் முதல் கட்டமாக துபாய்லிருந்து ராக் வரை இருந்தது.

கேரள எர்ணாகுளம் காக்கநாதில் பகுதியை சார்ந்தவர் இந்த இஸ்மாயீல். அவரின் சொந்த ஊர் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்றாலும் அருகிலுள்ள பகுதிகளில் மோசமான சேதம் ஏற்பட்டது என்று அவர் கூறினார்.

இதன் காரணமாக தான் அவரின் இந்த வித்தியாசமான முயற்சி அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

source – khaleej times