தமிழக மக்கள் தமிழிசை பேச்சை ஒரு காமெடி பீஸாக தான் பார்க்கிறார்கள்.

தமிழக மக்கள் தமிழிசை பேச்சை ஒரு காமெடி பீஸாக தான் பார்க்கிறார்கள். கடலில் தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கபட்டுள்ளது நிலத்தில் அல்ல என்று பஜகவின் தலைவர் டாக்டர் தமிழிசை பேசுவது சந்தா்பவாத பேச்சு!!

மீனவா்களை, கடல் வளத்தை, விவசாய நிலங்களை அழிக்கவே பஜக மத்திய அரசின் இந்த மக்கள் விரோத மக்கள் விரும்பாத ஹைட்ரோ கார்பன் திட்டம் !!!

ஹைட்ரோ கார்பன் எடுக்க இந்திய அரசு உடன்பாடு செய்துள்ளதற்கு ஆம்ஆத்மிகட்சி தமிழக ஒருங்கிணைப்பாளா் வசீகரன் கடும் கண்டனம் !!!!

இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதில் 52 இடங்கள் தனியார் நிறுவனங்களுக்கும், மூன்று இடங்கள் மட்டுமே அரசுத்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதின் மூலம் தனியாருக்குச் சொந்தமான நிறுவனங்கள் நாட்டின் இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதற்கும் மக்களின் சுற்றுப்புற சூழல் வாழ்வு தரம் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை அழிப்பதற்கும் இந்திய அரசு துணைபோகிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. இது தேச வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் நாகைப்பட்டினம் மாவட்டத்தையொட்டி கடல்பகுதியில் இரண்டு இடங்களும், சிதம்பரம் அருகே நிலப்பகுதியில் ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிறுவி அப்பகுதியின் பேரழிவுக்குக் காரணமான வேதாந்தா நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் கடல்பகுதியில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதின் மூலம் கடல் வளம் அழிவதோடு மீனவர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதே நிதா்சமான உண்மை..

கடலில் தான் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கபட்டுள்ளது நிலத்தில் அல்ல என்று பஜகவின் தலைவர் டாக்டர் தமிழிசை பேசவது சந்தா்பவாத பேச்சு இது மிகவும் கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டின் மீது தனக்கும் அக்கரை இருப்பதாக தமிழிசை பேசியிருப்பது வேடிக்கையானது, தமிழா்கள் அவரது பேச்சை ஒரு காமெடி பீஸாக தான் பார்க்கிறார்கள் என்பதை அவர் இன்னும் உணரவில்லை.

சிதம்பரம் நிலபரப்பு பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது இதன் மூலம் விவசாய நிலங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

தமிழக மக்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்திய அரசு செயல்படுவதை தமிழக ஆம்ஆத்மிகட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என தமிழ்நாடு ஆம்ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் S.A.N.வசீகரன் அறிக்கை.