தந்தையை உருட்டு கட்டையால் அடித்து கொன்ற மகன்!

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கொத்தங்குடியை சேர்த்தவர் வினோபன்(45), விவசாயி. இவரது மனைவி கஸ்தூரி(42). இவர்களுக்கு 2 மகன்கள். இவரது மூத்த மகன் வினோதகன்(17). 7ம் வகுப்பு வரை படித்துவிட்டு பள்ளிக்கு செல்லவில்லை. 2வது மகன் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.

வினோபன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவும் தகராறு செய்துள்ளார். நள்ளிரவு வரை சண்டை நடந்துள்ளது. அப்போது வினோபன் தனது மனைவியையும், தடுக்க முயன்ற 2 மகன்களையும் தங்கியிருக்கிறார். அதில், ஆத்திரமடைந்த மூத்த மகன் வீட்டில் கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார். போதையில் தள்ளாடி கொண்டிருந்த வினோபன் மயங்கி விழுந்து அதே இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சுவாமி மலை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர். தந்தையை, மகனே அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.