இருதரப்பினர் மோதல் – பெரும் பதற்றம்…

அருப்புக்கோட்டை அருகே இருதரப்பினர் மோதல் காரணமாக பதற்றம்.

அருப்புக்கோட்டை தொப்பலாங்கரை கிராமத்தில் கோவில் சொந்தம் கொண்டாடுவதில் இரு பிரிவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு பிரிவினர் கோவிலை மூட சென்றபோது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதில் இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் பல வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் போலீஸார் தீவிரப்படுத்தப்பட்டுள்ளர்.