துபாய் புர்ஜ் கலிஃபாவில் மகாத்மா காந்தி…

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தின விழாவை நினைவுகூறும் வகையில் துபாயின் சின்னமான புர்ஜ் கலீஃபாவில் மகாத்மா காந்தி அவர்களின் உருவம் காட்சிப்படுத்தப்பட்டது.

துபாயில் இந்திய தூதரகம், அபுதாபி மற்றும் துபாய் இமார் properties இணைந்து 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி இரவு 8.20 மற்றும் 8:40 ஆகிய நேரங்களில் திரையிடப்படும் என்று அறிவித்திருந்தது.

உலகில் அகிம்சை நிலவவும் மேலும் உலகம் அமைதி பெற விரும்பும் அனைத்து காந்தியின் ஆர்வலர்களுக்கும் இதை காணிக்கையாக காட்சியகப்படுத்தியது.

துபாய் இந்திய தூதர் புருஜ் கலீஃபாவில் சிறப்பு எல்.ஈ. டி-ஷோவை ஏற்பாடு செய்வதற்காக எமர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் தலைமையின் ஆதரவு பாராட்டுக்குறியது எனவும் இந்த முயற்சி இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே வலுவான உறவுகளின் மற்றொரு வெளிப்பாடு என்று அவர் கூறினார்.

Source – khaleej Times