மழலையின் மொழியை
மொழி பெயர்க்கும்
மொழி பெயர்ப்பாளர் - தாய்
* * *
காதலுக்கு "clearance"
கொடுக்கும்
"Civil office" - அண்ணன்
* * *
சமாதான குழந்தைக்காக
தினம் தினம்
அனுபவிக்கபடும்
பிரசவ வலி - போர்
* * *
என் தனிமையை
உணர்ந்து கொள்ளும்
இரகசியக் காதலன் - தலையணை
* * *
ஏழைக்கு தலையணை
சீமானுக்கு தொலைதூரம் - நிம்மதி
* * *
தாயினதும்
சேயினதும்
ஆரம்ப உறவுப்பாலம் - தொப்புள்கொடி
* * *
ஆண்மை இல்லாதவர்களுக்கு
வழங்கப்படும்
உதவிப்பணம் - சீதனம்
* * *
ஒரு நாளை
ஆட்சி செய்யும்
மணம் கமழும் அழகு ராணி - மலர்
* * *
அமிர்தம் வழங்கும் அட்சய பாத்திரம்
- என் குழந்தைக்கு
போதை வழங்கும் கள்ளு முட்டி
- என் கணவனுக்கு - என் மார்புகள்
* * *
அவளின் தேன்
மதுரக் குரலுக்காய்
சிணுங்கும் குழந்தை - தொலைபேசி
* * *
அவளின் முத்தங்களை
எடுத்துக்கொண்டு
சத்தங்களை மட்டும்
தரும் நயவஞ்சகன் - தொலைபேசி
* * *
அவளின் மார்பில்
தூங்க கொடுத்து வைத்த
ஒன்று - புத்தகம்
* * *
நான்கு கண்களின்
விபரீத விபத்து - காதல்
* * *
மொழிகள் மெளனிக்க
உணர்வுகள் மட்டும் பேசுகின்றன - முத்தம்
* * *
பாடித்திரிந்தாலும்
படிதாண்டும் போது
பறந்து விடும் உறவு - பல்கலை நட்பு
* * *
எனக்கு மட்டும்
தாயாகும்
ஒரு ஆண் - என் கணவன்
* * *
தாய்மையை
தூய்மைப்படுத்தும்
உத்தம நிகழ்வு - திருமணம்
Miss B வித்தியா.
மூன்றாம் வருடம்,
விஞ்ஞான பீடம்,
யாழ் பல்கலை.