50 வயதுப் பெண்கள் கவனிக்க...
பொதுவாக 50 வயதைக் கடந்த, மாத விலக்கு நின்றுவிட்ட பெண்கள் அதிக நேரம் தூங்குவதால், அவர்களுக்கு பக்கவாதம் போன்ற வலிப்பு நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஒருநாளில் 6 மணி நேரத்திற்கு மேல் தூங்குவதாலோ அல்லது 9 மணி நேரம் வரை தூக்கத்தை மேற்கொள்வதாலோ மூளைக்குச் செல்லும் ரத்த நாளத்தில் உறைதல் ஏற்பட்டு, பக்கவாதம், உணர்விழத்தல், பலவீனம், பேசுவதில் தெளிவில்லாத நிலை, ஒருங்கிணைப்பில்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும் என்று வடக்கு கரோலினா பொதுசுகாதார பல்கலைக்கழக டாக்டர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
9 மணி நேரம் வரை தூங்கும் பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்பு 60 - 70 விழுக்காடு வரை உள்ளதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவோருக்கு இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது 14 விழுக்காடு மட்டுமே என்றும் தெரிய வந்துள்ளது.