சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு
சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு
தித்திக்கும் தேனே சாய்ந்தாடு
தெவிட்டாத தமிழே சாய்ந்தாடு
மயிலே குயிலே சாய்ந்தாடு
மாடப்புறாவே சாய்ந்தாடு
கட்டிக்கரும்பே சாய்ந்தாடு
காய்ச்சிய பாலே சாய்ந்தாடு
குட்டி விளக்கே சாய்ந்தாடு
குட்டி நிலவே சாய்ந்தாடு
சாய்ந்தாடு அம்மா சாய்ந்தாடு
சாயக்கிளியே சாய்ந்தாடு