கல்வி நமது செல்வம்!
கல்வி நமது செல்வம் - என்றும்
கரைந்திடாத செல்வம்!
அள்ளி அள்ளிக் கொடுத்தும் - அது
குறைந்திடாத செல்வம்!
எல்லோருக்கும் வேண்டும் - அது
எப்போதைக்கும் வேண்டும்!
கல்வி கற்க வேண்டும் - வாழ்வில்
கடைப்பிடிக்க வேண்டும்!
கல்வி கற்ற மக்கள் - உடலில்
கண்கள் பெற்ற மக்கள்!
கல்வி பெற்ற மக்கள் - அவர்
அறிவு உற்ற மக்கள்!
கற்க கற்கக் கல்வி - அது
நிற்க வளர்க்கும் அறிவை!
நல்ல நல்ல நூல்கள் - அவற்றை
நித்தம் படிக்க வேண்டும்!
படிக்கப் படிக்க நூல்கள் - நல்ல
புதிய பொருளைக் கொடுக்கும்!
பழகப் பழகப் பேச்சு - என்றும்
வளமையோடு வளரும்!