பெண்களின் உடல் வளர்ச்சி
வளர் இளம் பருவம் ஆரம்பிக்கும் சமயத்தில், சாதாரண உயரத்தில் 80 முதல் 85 சதவீதத்தையும், பொதுவான எடையில் 53 சதவீதத்தையும் உடல் அமைப்பின் வளர்ச்சியில் 52 சதவீதத்தையும் எட்டியிருப்பார்கள்.
அந்த வளர் இளம் பருவத்தின் நிறைவில் இவர்களின் எடை இரு மடங்காக உயரக் கூடும். உயரம் 15 முதல் 20 சதவீதம் அதிகரிக்கும்.
கொழுப்பற்ற எடையில் 22 முதல் 42 கிலோ வரையும், கொழுப்பு 5 முதல் 14 கிலோ வரையும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.
உடலில் இருக்கும் கொழுப்பு கருத்தரிப்பு நேரத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
கருமுட்டை உற்பத்தி சுழற்சியையும், கால்சியம் அளவை 300 கிராம் முதல் 750 கிராம் வரையிலும் பராமரிப்பதற்கு உடலின் எடையில் 22 சதவீதம் கொழுப்பு இருப்பது நல்லது.