உற்சாக உணர்விற்கு...
இருமல்-சளி நீங்க...
இருமல், சளி தொல்லை உள்ளவர்களுக்கு வெற்றிலை சிறந்த மருந்து, 2 வெற்றிலை, நடுநரம்பு நீக்கிய 5 ஆடாதொடா இலையுடன் 10 மிளகு, ஒரு பிடி துளசி இலைகளை சேர்த்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். அதனுடன், 300 மில்லி நீர்விட்டு மூடிய பாத்திரத்தில் நன்றாக கொதிக்க வைத்து 75 மில்லி ஆனவுடன் வடிகட்டி குடிக்க வேண்டும். இதேபோல் தினமும் 2 அல்லது 3 வேளை சளி, இருமல் இருக்கும்வரை குடிக்கலாம். இப்படி செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி: சித்த மருந்துகடைகளில் கிடைக்கும் சுவாசகுடோரி மாத்திரை இரண்டுடன் 2 மிளகும் சேர்த்து, அதை ஒரு வெற்றிலையில் வைத்து வாயில்போட்டு நன்கு மெல்லவேண்டும். தினம் 2 வேளை இவ்வாறு மென்றால் ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி படிப்படியாக குணமாகும்.
காணாக்கடிக்கு...
எந்த பூச்சி கடித்தது என்று தெரியாமல் ஏற்படும் பாதிப்பான காணாக்கடிக்கு நடுநரம்பு நீக்கிய வெற்றிலை 5, மிளகு 10 ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து, 200 மில்லி நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக ஆனவுடன் தினமும் 2 வேளை சாப்பிட்டு வர காணாக்கடி விரைவில் குணமாகும்.
உற்சாக உணர்விற்கு...
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பு தூண்டப்படுகிறது. அத்துடன், ஒருவித உற்சாக உணர்வும் கிடைக்கிறது.
வாத நோய் நீங்க...
வாத நோய்களை குணமாக்கும் ''வாத நாராயணா'' எண்ணெய் தயாரிப்பில் வெற்றிலைசாறும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.
செக்ஸ் உணர்விற்கு...
பெரும்பாலான ஆசிய நாடுகளில் வெற்றிலைக்கு செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது.
தீப்புண் குணமாக...
தீப்புண் குணமாக வெற்றிலையில் நெய் தடவி லேசாக வதக்கி புண்ணின் மீது பற்றாக போட வேண்டும். விரைவில் அந்த புண் குணமாகும்.
பிற பயன்கள்...
2 தேக்கரண்டி அளவு வெற்றிலைச்சாற்றை உணவு சாப்பிட்ட பின் குடித்தால் அஜீரணம் தீரும்.
தலைவலி குணமாக வெற்றிலைச்சாற்றுடன் சிறிதளவு கற்பூரம் சேர்த்து குழைத்து வலி உள்ள இடத்தில் பூசலாம்.
வெற்றிலை காம்பை ஆமணக்கு எண்ணெயில் தோய்த்து ஆசன வாயில் வைக்க குழந்தைகளுக்கு எளிதில் மலம் கழியும். தொப்புள் பகுதியில் பற்றிட நன்கு சிறுநீர் இறங்கும்.
நுண்ணுயிர் தாக்கத்தினை எதிர்க்க வெற்றிலைச்சாறு உதவுகிறது.சைனஸ் பிரச்சினைக்கு வெற்றிலைச்சாறு தகுந்த நிவாரணம் அளிக்கக்கூடியது.